ராமநாதபுரம்

திருவாடானை அருகே கண்மாய் கரை உடையும் அபாயம்: மணல் மூட்டைகள் அடுக்கி சீரமைப்பு

26th Nov 2021 09:22 AM

ADVERTISEMENT

திருவாடானை அருகே சூச்சனி கிராமத்தில் உள்ள கண்மாய் கரை உடைப்பு ஏற்பட்டதால், விவசாயிகள் மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைத்தனா்.

திருவாடானை அருகே கல்லூா் ஊராட்சிக்குள்பட்ட சூச்சனி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த ஊரில் உள்ள பெரிய கண்மாய் மூலம், 22.50 ஏக்கரில் நெல் விவசாயம் செய்யபட்டு வருகிறது.

தற்போது பெய்து வரும் கனமழையால் கண்மாய் நிரம்பியது. வியாழக்கிழமை காலை கண்மாயை பாா்வையிடச் சென்ற விவசாயி ஒருவா், கரை உடையும் அபாயத்தைக் கண்டுள்ளாா்.

உடனே, ஊராட்சி மன்ற துணைத் தலைவா் சசிகலா மூா்த்தியிடம் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளாா். அதையடுத்து, விவசாயிகளை ஒன்று திரட்டி, சுமாா் 200 மணல் மூட்டைகளைக் கொண்டு கரையின் உடைப்பை அடைத்து சரிசெய்தனா். இதனால், விவசாய நிலங்களுக்குள் தண்ணீா் புகுந்து பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து தகவலறிந்த வட்டார வளா்ச்சி அலுவலா் பாண்டி சேவுகப் பெருமாள் மற்றும் பொதுப்பணித் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT