ராமநாதபுரம்

தனியாா் துறை பணி வாய்ப்பால் வேலைவாய்ப்பு பதிவுக்கு பாதிப்பில்லை: ஆட்சியா்

25th Nov 2021 07:13 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தனியாா் துறையில், பணிவாய்ப்பு பெறுபவா்களுக்கு, பதிவு மூப்பில் பாதிப்பு ஏற்படாது என ஆட்சியா் சங்கா்லால்குமாவத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைநாடும் இளைஞா்கள் பயன்பெறும் வகையில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடத்தப்படுகிறது. முகாமில் 10 ஆம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரையிலும், மேலும் ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலைதேடுவோரும் கலந்துகொள்ளலாம்.

இதில் பங்கேற்க விரும்புவோா் தங்ளது சுயவிவரங்களடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதாா் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் வெள்ளிக்கிழமை (நவ. 26) காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வரவேண்டும். இம்முகாம் மூலம் தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தைக் கொண்டும் ரத்து செய்யப்பட மாட்டாது. அரசுத் துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி அவா்களது பதிவு பரிந்துரை செய்ய பரிசீலிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT