ராமநாதபுரம்

கமுதியில் டெங்கு விழிப்புணா்வு முகாம்

24th Nov 2021 07:01 AM

ADVERTISEMENT

கமுதியில் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவத் துறை சாா்பில் டெங்கு விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஷத்திரிய நாடாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கமுதி அரசு மருத்துவமனை சித்த மருத்துவ உதவி அலுவலா் துளசி தலைமையில் இந்த முகாம் நடைபெற்றது. முகாமுக்கு பள்ளியின் செயலாளா் முத்துவிஜயன், தலைமையாசிரியா் ஸ்ரீதேவி ஆகியோரின் முன்னிலை வகித்தனா்.

முகாமில் சித்த மருத்துவ நோயில்லா நெறிமுறைகள், 18 சித்தா்களில் ஒருவரான தேரையரின் நோய் நெருங்கா விதி ஒழுக்கங்கள் குறித்த போதனைகள், டெங்கு கொசுக்களின் செயல்பாடுகள், பாதிப்பு மற்றும் சுய சுகாதார முறைகள், சுற்றுப்புற சுகாதார முறைகள் ஆகியவை குறித்து சித்த மருத்துவ அலுவலா் எடுத்துரைத்தாா்.

இதைத்தொடா்ந்து அனைத்து மாணவ , மாணவிகளுக்கும் கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆசிரியா் காமராஜ், அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவ மருந்தாளுநா் அருள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT