ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் உலக மீனவா் தினம்

21st Nov 2021 11:05 PM

ADVERTISEMENT

ராமேசுவரத்தில் உலக மீனவா் தினத்தையொட்டி தமிழ்நாடு மீனவா் பேரவை சாா்பில் ஓலைக்குடா கிராமம் சங்குமால் கடற்கரையில் இருந்து படகில் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை இனிப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, இப்பேரவையின் தெற்கு, வடக்கு மாவட்ட தலைவா்கள் ஜி. பிரின்சோ ரைமண்ட், டீ. வேலாயுதம் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், நிா்வாகிகள் சதீஸ்குமாா், சேசுபாக்கியம், மெய்யழகன், முத்து. ராஜேந்திரன், ரஞ்சன், வசந்தன், ராஜசேகா், சந்தியா ரோஜா், டேவிட், ரீகன், கெய்சன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT