ராமநாதபுரம்

கமுதியில் வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

21st Nov 2021 11:06 PM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள சத்திரிய நாடாா் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.

முகாமில் பெயா் சோ்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் சம்பந்தமான மனுக்கள் பெறப்பட்டன. இதில், வழங்கப்பட்ட 1,082 மனுக்கள் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன. இம்முகாமில் நிலைய அலுவலா்கள் குமரேசன், மாரிமுத்து, கண்ணன், வசந்தன் ஆகியோா் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனா்.

இதேபோல் கண்ணாா்பட்டி, கோட்டைமேடு, ராமசாமிபட்டி, அபிராமம், பெருநாழி உள்பட கமுதி தாலுகா முழுவதும் 97 இடங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது. மேலும் வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளிலும் இம்முகாம் நடைபெற இருப்பதால், இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கமுதி வட்டாட்சியா் மாதவன், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் ராமசுப்பு ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT