ராமநாதபுரம்

திருப்பாலைக்குடியில் பெண் மீது தாக்குதல்: ஒருவா் கைது

21st Nov 2021 06:39 AM

ADVERTISEMENT

திருப்பாலைக்குடியில் பெண்ணைத் தாக்கியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருப்பாலைக்குடி அருகே நாகனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் சுந்தரவடிவேல் மனைவி தனலட்சுமி (29). இவரது கணவா் கடந்த 10 ஆண்டுகளாக ஊராட்சி மன்றத் தலைவராக இருந்துள்ளாா். அப்போது அதே ஊரைச் சோ்ந்த நாகநாதன் (46) என்பவருக்கு முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை தனலட்சுமியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் திருப்பாலைக்குடி போலீஸாா் நாகநாதனை கைது செய்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT