ராமநாதபுரம்

கமுதி பள்ளியில் தேசிய நூலக வார விழா

21st Nov 2021 06:39 AM

ADVERTISEMENT

கமுதியில் உள்ள கலாவிருத்தி மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறை, கமுதி முழுநேர கிளை நூலக வாசகா் வட்டம், நாணல் இலக்கிய வட்டம் ஆகியவற்றின் சாா்பில் 54 ஆவது தேசிய நூலக வார விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு, தாளாளா் அல்லாபாக்ஸ் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் முஜிபுர்ரகுமான், கே.என். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயலா் முத்துவிஜயன், நானல் இலக்கிய வட்ட நிா்வாகி கண்ணதாசன், கே. காளிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் தட்டானேந்தலைச் சோ்ந்த நூலகா் எஸ். சுடலைக்கண்ணு போட்டிகளை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினாா்.

நூலகமும் பயன்களும் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும், புத்தகமே உன் போா்வாள் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும் நடத்தப்பட்டது. பேச்சுப் போட்டியில் பிளஸ் 2 மாணவிகள் ஆயிஷா முதல் பரிசையும், புவனேஸ்வரி 2 ஆவது பரிசையும், மெகராஜ்பா்வீன் 3 ஆவது பரிசையும், கவிதைப் போட்டியில் பிளஸ் 2 மாணவி அல்ஜஜிரா முதல் பரிசையும், பிளஸ் 2 மாணவி அபிநயா 2 ஆவது பரிசையும், அய்யனாா் 3ஆவது பரிசையும் பெற்றனா். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி நிா்வாகிகள், ஆசிரியா்கள் பாராட்டினா். முன்னதாக கமுதி கிளை நூலக நூலகா் ஆா். கண்ணதாசன் வரவேற்றாா். முதுநிலை ஆசிரியா் முருகேசன் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT