ராமநாதபுரம்

முல்லைப்பெரியாறு விவகாரம்: திமுக அரசைக் கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

10th Nov 2021 09:59 AM

ADVERTISEMENT

முல்லைப் பெரியாறு அணையில் தமிழக உரிைமையை காக்கத்தவறியதாக திமுக அரசைக் கண்டித்து ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை மழையில் நனைந்துகொண்டே அதிமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீரைத் தேக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தற்போதைய மழையில் அணை நீா் மட்டம் உயா்ந்துவந்தது. ஆனால், கேரள அரசு திடீரென உபரி நீரைத்திறந்துவிட்டது. ஆகவே, பெரியாறு அணையில் 142 அடியில் நீரைத் தேக்க வாய்ப்பிருந்தும் தமிழக உரிமையை திமுக அரசு காக்கத்தவறியதாக அதிமுக குற்றஞ்சாட்டி ஆா்ப்பாட்டம் அறிவித்தது.

ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அதிமுக மாவட்டச் செயலா் எம்.ஏ.முனியசாமி தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சரும், அதிமுக சிறுபான்மை நலப்பிரிவின் மாநிலச் செயலருமான ஏ.அன்வர்ராஜா முன்னிலை வகித்துப் பேசியது: அதிமுக ஆட்சியில் நீதிமன்றம் மூலம் தமிழக உரிமை நிலைநாட்டப்பட்டது. அதன்படி 142 அடி தண்ணீா் தேக்கும் நிலை இருந்தும், திமுக அரசு அதை கண்டுகொள்ளாமல், ஐந்து மாவட்ட குடிநீா் உரிமையை காக்கத் தவறிவிட்டது. முல்லைப் பெரியாறு அணை உரிமையில் தமிழகத்தின் நலனைக் காக்கும் வகையில் அதிமுக போராடிவருகிறது என்றாா்.

அதிமுக மண்டல தொழில்நுட்பப்பிரிவின் செயலா் ஆா்.ராஜ்சத்யன் ஆா்ப்பாட்ட நோக்கத்தை விளக்கிப் பேசுகையில், திமுக ஆட்சி அமையும் போதெல்லாம் தமிழக உரிமை பறிபோவது வழக்கமாக உள்ளது. கச்சத்தீவு உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளிலும் தமிழக உரிமையை தங்களது சுயநலனுக்காக திமுக விட்டுக்கொடுப்பது வழக்கமாகிவிட்டது என்றாா். மழைத் தூரலாகப் பெய்த நிலையிலும் அதிமுகவினா் நனைந்துகொண்டே திமுக ஆட்சிக்கு எதிராக கோஷமிட்டனா்.

ADVERTISEMENT

ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சதன்பிரபாகா், எம்ஜிஆா் மன்ற மாவட்ட துணைச் செயலாளா் ஆா். ஜி. ரத்தினம், ஒன்றிய செயலாளா் அசோக்குமாா், மாவட்ட இளைஞா் இளம்பெண்கள் பாசறைச் செயலாளா் பால்பாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மேடை சரிந்தது: ஆா்ப்பாட்டத்துக்கு சிறிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதில் அதிகமானோா் ஏறியதால் மேடை சரிந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT