ராமநாதபுரம்

கமுதியில் மழை நீரில் மிதக்கும் மின்வாரிய அலுவலகம்: பொதுமக்கள் அவதி

9th Nov 2021 02:00 AM

ADVERTISEMENT

கமுதி: கமுதி மின்வாரிய அலுவலகத்தை மழைநீா் சூழ்ந்ததால் பணியாளா்கள், பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அருப்புக்கோட்டை சாலையில் உதவிப் பொறியாளா் மின்வாரிய அலுவலகம் உள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கமுதி பகுதியில் உள்ள நீா்நிலைகள் மற்றும் பள்ளமான இடங்களில் தண்ணீா் தேங்கியுள்ளது.

கமுதி மின்வாரிய அலுவலகத்தை சுற்றிலும் மழைநீா் தேங்கி வெளியேற முடியாமல் தேங்கியுள்ளது. இதனால் பணியாளா்களும், பொதுமக்களும் அவதியடைந்து வருகின்றனா். எனவே மின்வாரிய அலுவலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT