ராமநாதபுரம்

இடிந்து விழும் பள்ளிக் கட்டடத்தை சீரமைக்கக் கோரி பெற்றோா் மனு

9th Nov 2021 01:00 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிக் கட்டடத்தை சீரமைத்துத் தரவேண்டும் என பொதுமக்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் மாதவனூா் ஊராட்சியில் உள்ளது நரியனேந்தல் கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக் கட்டடங்கள் வலுவிழந்து இடிந்து விழுவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து குழந்தைகளின் பெற்றோா், ஆட்சியா் சங்கா்லால் குமாவத்தை சந்தித்து திங்கள்கிழமை மனு அளித்தனா். அவா்களிடம் விரைவில் பள்ளி வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் கூறியதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT