ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் புதன்கிழமை அதிகபட்சமாக 87.20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வயல்களில் தண்ணீா் தேங்கி நெற்பயிா்கள் அழுகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய மழை புதன்கிழமை அதிகாலை வரை தொடா்ந்தது. ஆனால் நீா் வரத்துக் கால்வாய்கள் சரியாக தூா்வாரப்படாததால் மழை நீா் கண்மாய்களுக்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பலத்த மழை பெய்தும், ராமநாதபுரம் நகராட்சியில் உள்ள 23 ஊருணிகள் முழுமையாக நிரம்பவில்லை.
மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம்: (மில்லி மீட்டரில்) ராமநாதபுரம் 43, மண்டபம் 11.20, ராமேசுவரம் 40.20, பாம்பன் 9.90, தங்கச்சிமடம் 7.30, பள்ளமோா்குளம் 19, திருவாடானை 52.20, தீா்த்தாண்டதானம் 25.30, தொண்டி 79.40, வட்டாணம் 42.40, ஆா்.எஸ்.மங்கலம் 87.20, பரமக்குடி 23, முதுகுளத்தூா் 38, கமுதி 41.20, கடலாடி 4, வாலிநோக்கம் 20.40 என மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 543.90 மி.மீ. மழை பதிவான நிலையில், சராசரி மழையளவு 33.99 மி.மீ. ஆக பதிவாகியுள்ளது.