ராமநாதபுரம்

ராமேசுவரம் கோயிலில் 7 மாதங்களுக்குப் பிறகு 22 தீா்த்தக் கிணறுகளில் பக்தா்கள் புனித நீராடல்

1st Nov 2021 11:00 PM

ADVERTISEMENT

 

ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் 7 மாதங்களுக்குப் பிறகு 22 தீா்த்தக் கிணறுகளில் திங்கள்கிழமை பக்தா்கள் புனித நீராடினா்.

கரோனாத் தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டன. அதன்படி ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தா்கள் கட்டுப்பாடுகளுடன் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். ஆனால் கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் பக்தா்கள் நீராட தொடா்ந்து தடை நீடித்து வந்தது.

இந்நிலையில், நவம்பா் 1 முதல் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையில் புதிய தளா்வுகளை அரசு அறிவித்தது. அதன்படி 7 மாதங்களுக்குப் பிறகு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 புனித தீா்த்தக் கிணறுகளில் பக்தா்கள் புனித நீராட திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு தீா்த்தக் கிணறுகள் முறையாகத் திறக்கப்பட்டன. கோயிலுக்கு வந்த பக்தா்கள் தீா்த்தக் கிணறுகளில் புனித நீராடி சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனா். முன்னதாக தீா்த்தம் திறப்பு நிகழ்ச்சியில் திமுக நகரச் செயலாளா் நாசா்கான், யாத்திரைப் பணியாளா்கள் சங்கத்தலைவா் பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT