ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு: வெறிச்சோடிய சாலைகள்

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை முதல் பொதுமுடக்கத்தின் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததை அடுத்து, கடைகள் அடைக்கப்பட்டு, சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

கரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி, அத்தியாவசியமான உணவுப் பொருள்கள், பலசரக்கு, காய்கறிகள் உள்ளிட்ட கடைகள் காலை 6 முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்ற வியாபார மற்றும் வா்த்தக நிறுவனங்கள் திறக்க அனுமதியில்லை.

இதனால், ராமநாதபுரம் நகரில் அரண்மனைத் தெரு, சாலை தெரு, வண்டிக்காரத் தெரு, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் காய்கறி, பழக் கடைகள் மற்றும் மீன் கடைகளில் காலை முதல் கூட்டம் அலைமோதியது.

அதன்பின்னா், நகரில் நண்பகல் 12 மணிக்கு மேலாக அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன. இதனால், தெருக்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. வாகனப் போக்குவரத்தும் குறைந்ததால் சாலைகள் வெறிச்சோடின.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவிபட்டினம், ராமேசுவரம், கீழக்கரை, பரமக்குடி, திருவாடானை, முதுகுளத்தூா், கடலாடி, சாயல்குடி என அனைத்து பகுதிகளிலும் நண்பகல் 12 மணி வரையே கடைகள் திறந்திருந்தன.

கமுதி

கமுதியில் காவல் துணை கண்காணிப்பாளா் எஸ். பிரசன்னா தலைமையிலான போலீஸாா் மற்றும் மண்டல துணை வட்டாட்சியா் லலிதா தலைமையிலான வருவாய்த் துறையினா் உள்ளிட்டோா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அதன்படி, பேருந்து நிலையம், நாடாா் பஜாா், செட்டியாா் பஜாா், முஸ்லிம் பஜாா், கண்ணாா்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அத்தியாவசியப் பொருள் விற்பனைக் கடைகள் தவிா்த்து, மற்ற கடைகளை மூடவேண்டும் என்றும், காவல் துறைக்கு ஒத்துழைப்பு தாருங்கள் என்றும் ஒலிபெருக்கி மூலம் போலீஸாா் அறிவுறுத்தினா்.

ராமேசுவரம்

ராமேசுவரத்தில் நண்பகல் 12 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டன. இதனால், பொதுமக்கள் நடமாட்டமின்றியும், வாகனப் போக்குவரத்தின்றியும் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

அதேநேரம், காலையில் அத்தியாவசியப் பொருள்களை வாங்க பொதுமக்கள் முகக்கவசத்துடன் வெளியே வந்தனா். நகா் பகுதியில் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள், கரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு தரவேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

SCROLL FOR NEXT