ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 180 பேருக்கு கரோனா

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் 180 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து சுகாதாரத் துறை வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மாா்ச் முதல் தற்போது வரை 9,535 போ் கரோனா தொற்றுக்கு பாதிப்புக்குள்ளாகி உள்ளனா். இதில், 8,102 போ் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனா். 1,287 போ் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் உள்ளனா். இதில், 146 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா்.

இந்நிலையில், புதன்கிழமை ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களிடம் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், வியாழக்கிழமை 180 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

SCROLL FOR NEXT