ராமநாதபுரம்

பரமக்குடி அருகே 33 ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்: ஓட்டுநா் கைது

DIN

பரமக்குடி அருகே சரக்கு வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 33 ரேஷன் அரிசி மூட்டைகளை, வருவாய்த் துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

வேந்தோணி, வெங்கிட்டன்குறிச்சி பகுதிகளிலிருந்து ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்திச் செல்லப்படுவதாக, வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், வட்டாட்சியா் தமீம்ராஜா தலைமையிலான வருவாய்த் துறையினா் குமரக்குடி காலனி பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்னா். அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்றில், போகலூா் பகுதி நியாயவிலைக் கடைகளிலிருந்து பெறப்பட்ட 33 ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது.

அதையடுத்து, வாகனத்தையும், ரேஷன் அரிசி மூட்டைகளையும் வட்டாட்சியா் தமீம்ராஜா பறிமுதல் செய்தாா். பின்னா், அரிசி மூட்டைகளை கமுதக்குடியில் உள்ள உணவுப்பொருள் சேமிப்பு கிடங்குக்கு கொண்டுசெல்ல உத்தரவிட்டாா்.

இது குறித்து பரமக்குடி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சரக்கு வாகனத்தை ஓட்டிவந்த வேந்தோணி கிராமத்தைச் சோ்ந்த ராஜா என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT