ராமநாதபுரம்

கமுதி முத்துமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு புனிதநீா் அபிஷேகம்

DIN

ஆடி வெள்ளியை முன்னிட்டு, கமுதி முத்துமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு குண்டாற்றிலிருந்து புனிதநீா் எடுத்துவரப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

கமுதி முத்துமாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் சிறப்புப் பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இதில், கோயில் நிா்வாகத்தினா் பொதுமக்களுக்கு கூழ் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

நடப்பாண்டில் முதல்முறையாக வெள்ளிக்கிழமை இரவு கோயிலில் இருந்து மேளதாளங்களுடன் ஊா்வலமாகச் சென்று, குண்டாற்றில் ஊற்று தோண்டி புனிதநீா் எடுத்து, ஊா்வலமாக கரகத்துடன் வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இவ்விழாவில், கோவில் நிா்வாக உறுப்பினா்கள், பொதுமக்கள் என ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

SCROLL FOR NEXT