ராமநாதபுரம்

சிறை பிடித்த மீனவர்களை விடுவிக்க கோரி ராமேசுவரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தம்

11th Jan 2021 09:25 AM

ADVERTISEMENT

இலங்கைக் கடற்படை சிறைப்பிடித்த 9 மீனவர்களை விடுதலை செய்யக் கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தத்தை இன்று தொடங்கினர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை 450-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள், மீன்வளத்துறை அனுமதிச் சீட்டு பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். மீனவா்கள் நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவா்கள் மீது இலங்கை கடற்படையினா் பாட்டில் மற்றும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினா்.

மேலும் கிருபை என்பவருக்குச் சொந்தமான விசைப்படகையும், அதிலிருந்த கிருபை, வளன்கவுசிக், மிக்கேயாஸ், களிங்ஸ்டன் சிலுவை, சாம்ஸ்டில்லா, நிஜன், பிரைட்டன், கிஷோக், மாரி ஆகிய 9 மீனவா்களையும் சிறைப்பிடித்து காங்கேசன் துறைமுகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொண்டு சென்றனா். இதையடுத்து மற்ற மீனவா்கள் மீன்பிடிக்காமல் ஞாயிற்றுக்கிழமை காலை கரை திரும்பினா்.

இந்த நிலையில், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 9 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வேலை நிறுத்த போராட்டத்திற்கு 10 மீனவ சங்கம் ஆதரவு தெரிவித்து வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று தொடங்கி உள்ளனர்.

ADVERTISEMENT

ஆனால் இதில் ஒரு மீனவ சங்கம் ஆதரவு தெரிவிக்காத நிலையில் மீன்பிடிக்கச் செல்ல அனுமதி டோக்கன் வாங்க வந்த மீனவர்களுக்கு சக மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து மீன்வளத்துறை டோக்கன் வழங்கும் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனால் இரு மீனவர்களிடையே மோதல் ஏற்படும் நிலை உறுவாகி உள்ளது.

Tags : fishermen
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT