ராமநாதபுரம்

சாயல்குடியில் தேமுதிக ஆர்ப்பாட்டம்

27th Feb 2021 06:32 PM

ADVERTISEMENT

சாயல்குடியில் தேமுதிக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தேமுதிக கட்சியின் சார்பில் அக்கட்சியின் மாவட்ட தலைவர் சிங்கை ஜின்னா தலைமையிலும், மாநில கொள்கை பரப்பு செயலாளர் மோகன்ராஜ் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேர்தல் தேதி அறிவித்ததால் போலீசார் அனுமதி மறுத்த போதும் அனுமதி இன்றி சாயல்குடி பிரதான சாலையான கிழக்கு கடற்கரை சாலை மற்றும் அருப்புக்கோட்டை சாலையில் ஊர்வலமாக சென்று சாயல்குடி பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் 300 பெண்கள் உள்பட 800 பேர் கலந்து கொண்டு தமிழக அரசையும், மத்திய அரசையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் ஒரு போலீசார் கூட பாதுகாப்புக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

ADVERTISEMENT


 

Tags : protest
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT