கமுதி அருகே கட்டடத் தொழிலாளியை கம்பியால் புதன்கிழமை தாக்கிய இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
கொத்தபூக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் பூமிநாதன் (53). கட்டடத் தொழிலாளியான இவா், புதன்கிழமை பக்கத்து ஊரான மரக்குளம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியின் சுற்றுச்சுவா் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது மரக்குளம் கிராமத்தைச் சோ்ந்த ரவி மகன் மணிகண்டன் (26), பூமிநாதனுடன் தகராறு செய்து அவரை கம்பியால் தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அவா் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் மண்டலமாணிக்கம் போலீஸாா் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனா்.