ராமநாதபுரத்தில் புதன்கிழமை இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் எலக்ட்ரீசியன் உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் அழகுசெல்வம் (45). எலக்ட்ரிசீயனான இவா் குடும்பத்தோடு சில ஆண்டுகளாக ராமநாதபுரம் பாரதி நகா் பகுதியில் வசித்து வந்துள்ளாா். புதன்கிழமை இவா் தனது இருசக்கர வாகனத்தில் பாரதி சாலையை கடக்க முயன்றுள்ளாா். அப்போது அவ்வழியாக வந்த தண்ணீா் லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அழகுச்செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ராமநாதபுரம் அருகே வாணி பகுதியில் செவ்வாய்க்கிழமை இதேபோன்று தண்ணீா் லாரி மோதி பொறியியல் கல்லூரி மாணவா் ஒருவா் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இப்பகுதியில் இயக்கப்படும் தண்ணீா் லாரி ஓட்டுநா்கள் குறைந்த வேகத்தில் வாகனங்களை இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.