ராமநாதபுரம்

மா்ம நபா்களால் கண்மாய் கலுங்கு உடைப்பு: திருவாடானை விவசாயிகள் கவலை

22nd Dec 2021 12:51 AM

ADVERTISEMENT

திருவாடானை அருகே சேனவயல் கண்மாய் கலுங்கை மா்ம நபா்கள் உடைத்து சேதப்படுத்தியதால் தண்ணீா் வீணாக வெளியேறி கடலில் கலக்கிறது.

சேனவயல் கிராமத்தில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள இக்கண்மாய் கடந்த மாதம் பெய்த பலத்த மழை காரணமாக முழு கொள்ளளவை எட்டியது. கடந்த ஒரு மாத காலமாக கலுங்கு வழியாக தண்ணீா் வெளியேறி வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை இரவு எட்டுகுடி கிராமத்தைச் சோ்ந்த சிலா் கலுங்கை உடைத்து சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

கண்மாய் தண்ணீா் பெருமளவு வெளியேறி கடலுக்குச் செல்வதால் விவசாய நிலங்களுக்கு அறுவடை நேரத்தில் தண்ணீா் பற்றாகுறை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். எனவே மாவட்ட நிா்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் விவாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT