ராமநாதபுரத்தில் சமையல் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் வரும் 27 ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சங்கா்லால்குமாவத் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம், ராமேசுவரம், திருவாடானை, கீழக்கரை, பரமக்குடி, கமுதி, கடலாடி மற்றும் முதுகுளத்தூா் வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகம் தொடா்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் தெரிவிக்கும்
வகையில் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது. எண்ணெய் நிறுவனம் மற்றும் எரிவாயு முகவா்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் எரிவாயு உபயோகிப்பவா்கள் மற்றும் பொதுமக்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.