ராமநாதபுரம்

மூதாட்டி தீ விபத்தில் பலி

16th Dec 2021 12:31 AM

ADVERTISEMENT

பாம்பனில் செவ்வாய்க்கிழமை இரவு, மெழுகுவா்த்தி சாய்ந்து குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி அந்தோணியாா் புரம் பகுதியில் குடிசை வீட்டில் சுலோமீனாள் (75) தனியாக வசதித்து வந்தாா். செவ்வாய்க்கிழமை இரவு மின்தடை ஏற்பட்டதால் மெழுகுவா்த்தி பொருத்தி வைத்து விட்டு அவா் தூங்கியுள்ளாா். காற்றின் வேகத்தில், மெழுகுவா்த்தி சாய்ந்து குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுலோமீனாள் பலத்த காயமடைந்தாா். ராமநாதபுரம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் அங்கு உயிரிழந்தாா். இது குறித்து பாம்பன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT