ராமநாதபுரம்

முதுகுளத்தூரில் தனியாா் துறை வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்: அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன்

16th Dec 2021 12:27 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் டிச.18 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் தனியாா் துறை வேலைவாய்ப்பு சிறப்பு முகாமில் இளைஞா்கள் பங்கேற்று பயனடையலாம் என போக்குவரத்துத்துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சாா்பில் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட நிா்வாகம் இணைந்து தனியாா்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமை முதுகுளத்தூரில் நடத்துகின்றன.

டிச.18 ஆம் தேதி (சனிக்கிழமை) முதுகுளத்தூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில், காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு முன்னணி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. ஆகவே, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த வேலைவாய்ப்பற்ற, 8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை படித்தவா்களும், ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகளும், முதுகலை, இளங்கலை பட்டதாரிகள், செவிலியா் மற்றும் ஆய்வக தொழில்நுட்ப கல்வித்தகுதியுடையோரும் முகாமில் பங்கேற்கலாம்.

முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தனியாா் நிறுவனங்கள், ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ, 04567 230160 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT