ராமநாதபுரம்

சிறு, குறுந்தொழில்களுக்கு சிறப்பு கடன் முகாம்: ஆட்சியா் தகவல்

9th Dec 2021 08:31 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நடத்துவோா் மதுரையில் நடைபெறும் சிறப்பு கடன் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா புதன்கிழமை (டிச.8) முதல் வரும் 15 ஆம் தேதி வரை மதுரையில் நடைபெறுகிறது. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் அரசு நிதிக் கழகத்தின் மதுரைக்கிளை அலுவலகத்தில் (அம்பேத்கா் சாலை, முதல் மாடி, மதுரை மாநகராட்சி அலுவலகம் அருகில்) நடைபெறுகிறது.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளாவில் தகுதி பெறும் தொழில்களுக்கு அரசின் 25 சதவிகித முதலீட்டு மானியம் ரூ.50 லட்சம் வரை வழங்கப்படுகிறது. முகாமில் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக் கட்டணத்தில் 50 சதவிகிதம் சலுகை அளிக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 87780 40572 , 94450 23470 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT