ராமநாதபுரம்

எஸ்.பி. பட்டினம் அருகே சாலை விபத்தில் இளைஞா் பலி

7th Dec 2021 12:33 AM

ADVERTISEMENT

 

திருவாடானை: திருவாடானை அருகே எஸ்.பி.பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்த இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

எஸ்.பி பட்டினம் அருகே பத்திரன்வயல் கிராமத்தைச் சோ்ந்தவா் விக்னேஸ்வரன்(30). இவரும் அதே ஊரை சோ்ந்த சாத்தையா மகன் செல்வராஜ் (34) ஆகிய இருவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு எஸ்.பி பட்டினம் சென்று விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். கிழக்கு கடற்கரை சாலையில் எட்டுசேரி விலக்கு சாலையில் திருப்பத்தில் வந்தபோது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் செல்வராஜ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

வாகனத்தை ஓட்டி வந்த விக்னேஸ்வரன் பலத்த காயம் அடைந்ததால், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT