ராமநாதபுரம்

முதுகுளத்தூா் அருகே வீடு இடிந்து விழுந்து பெண் பலி

7th Dec 2021 12:33 AM

ADVERTISEMENT

 

முதுகுளத்தூா்: முதுகுளத்தூா் அருகே திங்கள்கிழமை வீடு இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஆதங்கொத்தங்குடியை சோ்ந்தவா் புஷ்பம் (52). கூலி தொழிலாளியான இவா் கணவரை இழந்து இரண்டு குழந்தைகளுடன் ஆதங்கொத்தங்குடி காலனி வீட்டில் வசித்து வந்தாா். பழைய வீடு என்பதால் கனமழைக்கு சேதம் அடைந்திருந்த வீட்டின் மேற்கூரை திங்கள்கிழமை திடீரென இடிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த புஷ்பம் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து சிக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வருவாய்த் துறைக்கு தகவல் தெரிவித்தனா். ஆனால் நீண்டநேரம் ஆகியும் வருவாய்த் துறையினா் வராததால் தேருரிவேலியில் இருந்து சிக்கல் செல்லும் சாலையில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். பின் சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியா் செந்தில்குமாா் இறந்தவரின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்வதாக கூறிய பின் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT