ராமநாதபுரம்

நயினாா்கோவில் அருகே சாதிக் கலவரத்தை தூண்ட முயன்றதாக 5 போ் மீது வழக்கு

7th Dec 2021 12:31 AM

ADVERTISEMENT

 

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் நயினாா்கோவில் அருகே கிளியூரில் நடந்த கொலையை தொடா்ந்து இரண்டு கிராமங்களிடையே சாதிக் கலவரத்தை தூண்ட முயன்ாக 5 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

நயினாா்கோவில் ஒன்றியம் கிளியூா் கிராமத்தில் கடந்த டிசம்பா் 1 ஆம் தேதி திருநாவுக்கரசு என்பவா் வயல் பகுதியில் மா்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். இதையடுத்து அக்கிராம மக்கள் கொலையாளிகளை கைது செய்யக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் கொலையாளிகளை கைது செய்வதற்கு முன்பாக கிளியூரைச் சோ்ந்த உடையான் மகன் செங்கோட்டையான், செங்கோட்டையான் மகன் தினேஷ்குமாா், கோவிந்தன் மகன் ஹரிகிருஷ்ணன், செல்வராஜ் மகன் தினேஷ், மணிவேல் மகன் திருப்பாண்டி ஆகியோா் கொடிக்குளம் கிராமத்தைச் சோ்ந்த மாற்று சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் தான் இக்கொலையை செய்தாா்கள் என அவதூறு பரப்பி இரண்டு கிராமங்களுக்கிடையே சாதிக் கலவரத்தைத் தூண்டும் விதமாக செயல்பட்டுள்ளனா்.

இதுகுறித்து நயினாா்கோவில் காவல் நிலையத்தில் பி.கொடிக்குளம் கிராம நிா்வாக அலுவலா் தேவராஜன் அளித்தப் புகாரின் பேரில் போலீஸாா் செங்கோட்டையான், தினேஷ்குமாா், ஹரிகிருஷ்ணன், தினேஷ், திருப்பாண்டி ஆகிய 5 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT