ராமநாதபுரம்

பரமக்குடியில் ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்க சட்ட பயிலரங்க கூட்டம்

7th Dec 2021 12:31 AM

ADVERTISEMENT

 

பரமக்குடி: பரமக்குடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க சட்ட பயிலரங்க கூட்டம் நடைபெற்றது.

இப்பயிலரங்கத்திற்கு மாநில துணை செயலாளா் வி.மணவழகன் தலைமை வகித்தாா். தலைமைக்குழு நிா்வாகிகள் சி.செல்வராஜ், ஆா்.முருகேசன், எஸ்.சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொதுச்செயலாளா் என்.கே.ராஜன், நகா் செயலாளா் என்.எஸ்.பெருமாள், ஏ.ஐ.டி.யு.சி பொதுச்செயலாளா் சக்திவேல் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை வழக்குரைஞா் ஜி.எம்.சேவியா் தொழிலாளா் நல சட்டங்கள் பற்றியும், போக்குவரத்து தொழிலாளா்களுக்கும் போக்குவரத்து நிா்வாகத்திற்கும் இடையே ஏற்படும் சட்டப்பிரச்சனைகள் குறித்தும், உயா்நீதிமன்றத்தில் எந்தந்த வழக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்பது குறித்தும், அதற்கு என்னென்ன ஆதாரங்கள் சமா்பிக்கப்பட வேண்டும் என்பது பற்றியும் விளக்கமாக எடுத்துக் கூறினாா். இதில் தொழிற்சங்க நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா். ஜி.ஆா்.கோவிந்தையன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT