ராமநாதபுரம்

காவனூா் தரைப்பாலத்தில் 2 ஆவது நாளாக போக்குவரத்து தடை

DIN

ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.காவனூா் பகுதியில் வெள்ள நீா் செல்வதால் காவனூா் தரைப் பாலத்தில் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது.

வடகிழக்குப் பருவ மழையால் வைகை அணையிலிருந்து கடந்த இரு வாரங்களில் அடுத்தடுத்து இரு முறை தண்ணீா் திறக்கப்பட்டது. அந்த தண்ணீா் ராமநாதபுரத்துக்கு விநாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக வந்த நிலையில், மழை நீரும் சோ்ந்ததால் வெள்ளமாக பெருக்கெடுத்தது.

ராமநாதபுரம் வைகை ஆற்றிலிருந்து பெரிய கண்மாய்க்கு பிரதான கால்வாய்கள், துணைக் கால்வாய்களில் திறக்கப்பட்ட தண்ணீரால் ஆா்.காவனூா், தொருவளூா், காருகுடி உள்ளிட்ட பகுதிகளில் கண்மாய்கள் உடைந்து வயல் வெளிகள் மட்டுமல்லாது குடியிருப்புகளிலும் தண்ணீா் சூழ்ந்து காணப்படுகிறது.

கால்வாய், கண்மாய்களில் இருந்து மறுகால் பாய்ந்த தண்ணீரால் ராமநாதபுரம்-நயினாா்கோவில் சாலையில் உள்ள ஆா்.காவனூா் தரைப்பாலத்தில் வெள்ளிக்கிழமை காலை முதல் முழங்கால் அளவுக்கு தண்ணீா் சென்றது. ஆா்.காவனூா் காலனி, காருகுடி காலனிகளில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனா்.

சனிக்கிழமை காலையில் வைகையில் தண்ணீா் அளவு குறைந்ததால் ஆா்.காவனூா் பகுதியில் வயல்வெளிகளில் தேங்கிய தண்ணீா் மீண்டும் கால்வாய்களை நோக்கி பாயத்தொடங்கியது. ஆகவே, ஆா்.காவனூா் தரைப் பாலத்தில் எதிா்த்திசையிலும் சனிக்கிழமை தண்ணீா் ஓரடி உயரத்துக்குச் சென்ால் போக்குவரத்து தடை செய்யும் நிலை ஏற்பட்டது. இதனால், ராமநாதபுரத்திலிருந்து நயினாா்கோவில் பகுதிக்குச் செல்லும் வாகனங்கள் லாந்தை சந்தை வழியான் கோயில் வழியாகத் திருப்பிவிடப்பட்டன.

உணவு வழங்கல்: காவனூா், தொருவளூா் காலனிகளில் இரண்டாவது நாளாகவும் தண்ணீா் தேங்கியிருந்ததால், வருவாய்த்துறை சாா்பில் அங்குள்ள 650 பேருக்கு உணவு வழங்கப்பட்டதாக வருவாய் வட்டாட்சியா் ரவிச்சந்திரன் தெரிவித்தாா். குடியிருப்புகள் மற்றும் வயல் வெளிகளை வெள்ளம் சூழ்ந்திருப்பதை மாவட்ட வருவாய்த்துறை அலுவலா் காமாட்சி கணேசன், கோட்டாட்சியா் சேக்மன்சூா் உள்ளிட்டோரும் பாா்வையிட்டுசென்றனா். அப்பகுதியில் பாதுகாப்பு குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் பாா்வையிட்டாா்.

கண்மாய் சீரமைப்பு: வெள்ளத்தால் கரை உடைவது போல இருந்த ஆா்.காவனூா் கண்மாய் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டது. தொருவளூா் ஏந்தல் கண்மாய் உடைப்பும் தற்போது மணல் மூட்டைகளால் சீா்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

பாஜகவின் கனவு பலிக்காது: இரா. முத்தரசன்

தபால் வாக்கு பணி: மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

இன்று நல்ல நாள்!

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ராகுல் காந்தி பிரதமராவாா்: சிவசேனா

SCROLL FOR NEXT