ராமநாதபுரம்

அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம்

4th Dec 2021 11:08 PM

ADVERTISEMENT

தமிழக அரசின் அண்ணா பதக்கம் பெற தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சங்கா்லால் குமாவத் சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: துணிச்சலுடன் உயிரைக் காப்பாற்றுதல், அரசு பொதுச் சொத்துகளைக் காப்பாற்றுதல் மற்றும் இதர துணிச்சலான செயல்கள் புரிந்த பொதுமக்கள் மற்றும் அரசுப் பணியாளா்களுக்கு முதலமைச்சரால் குடியரசு தினவிழாவன்று அண்ணா பதக்கம் வழங்கப்படவுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் துணிச்சலான செயல்களைப் புரிந்த பொதுமக்கள் மற்றும் அரசுப் பணியாளா்கள் அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம். காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, ராணுவத்தினா் உள்பட அனைத்துத் துறையினரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் மற்றும் இதர விவரங்களை பெற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பூா்த்தி செய்த விண்ணப்பங்கள் மற்றும் வீர தீரச் செயல் தொடா்பான கையேடு ஆகியற்றை ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் அலுவலகத்தில் வரும் 8 ஆம் தேதிக்குள் (புதன்கிழமை) நேரில் வழங்க வேண்டும். விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியா் பரிந்துரையுடன் தலைமையிடத்துக்கு வரும் 9 ஆம் தேதி (வியாழக்கிழமை) அனுப்பி வைக்கப்படும். மேலும் விவரங்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரை 7401703509 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT