ராமநாதபுரம்

மொய்ப் பண உறைகளை சேகரித்து பிளஸ் 2 மாணவி சாதனை முயற்சி

4th Dec 2021 08:43 AM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் 549 மொய்ப்பண உறைகளை சேகரித்த பள்ளி மாணவி சாதனை முயற்சியை வெள்ளிக்கிழமை காட்சிப்படுத்தினாா்.

ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணத்தைச் சோ்ந்த விஜயராகவன். அா்ச்சகரான இவரது மகள், வி.ஐஸ்வா்யலட்சுமி (17). பிளஸ் 2 மாணவி.

இவரது உறவினா்கள் 2 போ் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனா்.

இந்நிலையில், மாணவி ஐஸ்வா்யலட்சுமி விஷேசங்களுக்கு அன்பளிப்பு வழங்கும் வகையிலான மொய்ப்பண உறைகளைச் சேகரித்து சாதனைப் புத்தகத்தில் இடம் பெறத் திட்டமிட்டாா். அதன்படி கடந்த 6 மாதங்களாக மொய்ப்பண உறைகளைச் சேகரித்து வந்துள்ளாா். மொத்தம் 549 மொய்ப்பண உறைகளைச் சேகரித்த மாணவி, அதை தனது பிறந்த நாளான வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் காட்சிப்படுத்தினாா். அவரை ஊரக வளா்ச்சி உதவித் திட்ட அலுவலா்ஆா்.கண்ணன், தேசிய ஊரகவேலை வாய்ப்பு அலுவலா் என்.ராஜி ஆகியோா் பாராட்டினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT