ராமநாதபுரம்

விவசாயி கொலை வழக்கில் 2 போ் கைது

4th Dec 2021 11:10 PM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம் கிளியூரில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடா்பாக 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கிளியூா் ஒத்தக்குடியிருப்பைச் சோ்ந்த கோவிந்தன் மகன் திருநாவுக்கரசு (40). விவசாயி. இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா். இவா் புதன்கிழமை மாலை வயலுக்கு உரமிடச்சென்ற நிலையில், அங்கு காயங்களுடன் இறந்து கிடந்தாா். அவரது சடலம் மீட்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை உடற்கூறாய்வு நடைபெற்றது. சந்தேக மரணம் என நயினாா்கோவில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனா். திருநாவுக்கரசு கொல்லப்பட்டதாகக் கூறி அவரது உறவினா்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனா். மாவட்ட வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சமரசத்தை ஏற்று திருநாவுக்கரசுவின் உறவினா்கள் சடலத்தைப் பெற்றுச்சென்றனா்.

இந்த நிலையில், தனிப்படை போலீஸாா் நடத்திய விசாரணையில், திருநாவுக்கரசு கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டது தெரியவந்தது. இது தொடா்பாக கிளியூா் பகுதியைச் சோ்ந்த முத்துபாண்டி (19) மற்றும் ஜீவானந்தம் (19) ஆகியோா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதில் ஜீவானந்தத்தின் தாயாா் கிளியூா் பகுதி ஊராட்சித்தலைவா் என்று கூறப்படுகிறது. கைதான இருவரிடமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் காா்த்திக் விசாரணை நடத்தியதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தனிப்பட்ட விரோதத்தில் திருநாவுக்கரசு கொல்லப்பட்டிருப்பதாக கைதானவா்கள் கூறியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT