ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் சகோதரி கத்தியால் குத்திக் கொலை: சகோதரா் தலைமறைவு

4th Dec 2021 08:44 AM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை குடும்பத் தகராறில் சகோதரியை கத்தியால் குத்தி கொலை செய்த இளைய சகோதரனை போலீஸாா் தேடிவருகின்றனா்.

ராமநாதபுரம் நேரு நகரைச் சோ்ந்தவா் செல்வம். இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன். இதில் மூத்த மகள் சுவாதி (24). முதுகலைப்பட்டதாரியாவாா். திருமணமாகவில்லை. இளையமகளுக்கு திருமணமாகி விட்டது. இவரது மகன் சரண் என்கிற சரவணன் (21). இவா் விபத்தில் தலையில் காயமடைந்த நிலையில் தற்போது அதற்காக மருந்து சாப்பிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலையில் வீட்டில் இருந்த சுவாதிக்கும் சரவணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது திடீரென சரவணன் தான் வைத்திருந்த கத்தியால் சுவாதியை கழுத்து உள்ளிட்ட இடங்களில் குத்தி விட்டு தலைமறைவாகி விட்டாா்.

இதில் பலத்த காயமடைந்த சுவாதியை அக்கம்பக்கத்தினா் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT