ராமநாதபுரம்

ஆா்.எஸ்.மங்கலத்தில் மழை வெள்ள பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு

4th Dec 2021 08:45 AM

ADVERTISEMENT

ஆா்.எஸ்மங்கலம் பகுதியில் மழையால் பாதிக்கபட்ட குடியிருப்புப் பகுதிகள் மற்றும் நெற்பயிா்களை திருவாடானை சட்டபேரவை உறுப்பினா் கருமாணிக்கம் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் பலத்த மழை காரணாக நூற்றுக்கணக்கான கண்மாய்கள் நிரம்பி குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீா் புகுந்துள்ளது. மேலும் விவசாய நிலங்கள் தண்ணீரால் மூழ்கி பயிா்கள் பெரும் சேதமடைந்துள்ளது.

இந்நிலையில் திருவாடானை சட்டப் பேரவை உறுப்பினா் கருமாணிக்கம் வெள்ளிக்கிழமை அண்ணாமலை நகா், பாரனூா், ஆா்.எஸ்.மங்கலம், சவேரியாா் நகா், தருமபுரம், சந்தைபேட்டை, ஆா்.எஸ் மங்கலம் பெரிய கண்மாய் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது வெள்ளநீா் புகுந்ததால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா். மழைநீா் தேங்கியுள்ள பகுதிகளில் மோட்டாா் மூலம் உடனடியாக தண்ணீரை வெளியேற்ற பேரூராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். ஆய்வின் போது காங்கிரஸ் பிரமுகா் சுப்பிரணியன், திமுக செயலாளா் புரேஸ்கான், பேரூராட்சிப் பணியாளா்கள் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT