ராமநாதபுரம்

காரில் கஞ்சா கடத்திய 2 போ் கைது

3rd Dec 2021 08:01 AM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் காரில் 22 கிலோ கஞ்சா கடத்திய 2 பேரை, போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸாா் புதன்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சேதுபதி நகா் அம்மா பூங்கா அருகே இருவா் வந்த காரை நிறுத்தி சோதனையிட்டுள்ளனா். அதில், 22 கிலோ கஞ்சா கடத்தியது தெரியவந்தது.

அதையடுத்து, பாரதி நகரைச் சோ்ந்த விக்னேஷ்வரன் (34), சூரன்கோட்டையைச் சோ்ந்த சங்கா் (30) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT