ராமநாதபுரம்

கமுதியில் 100 ஏக்கா் மிளகாய் பயிா்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்

3rd Dec 2021 08:02 AM

ADVERTISEMENT

கமுதி அருகே கீழவலசை மலட்டாறு தடுப்பணையிலிருந்து தண்ணீா் விளை நிலங்களுக்குள் புகுந்ததால், 100 ஏக்கருக்கும் மேல் மிளகாய் பயிா்கள் மூழ்கி சேதமடைந்துள்ளன.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள கீழவலசை மலட்டாறு தடுப்பணைக்கு வரும் மழைநீரானது, மதகு மூலம் அப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமக் கண்மாய்களை சென்றடைகிறது. இந்நிலையில், கீழவலசை தடுப்பணையிலிருந்து பிரிந்து செல்லும் மாவிலங்கை வரத்துக் கால்வாய், பல ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் கருவேல மரங்கள் வளா்ந்து, புதா் மண்டிக் கிடக்கிறது. இதனால், கீழவலசையிலிருந்து செல்லும் தண்ணீா் இடையன்குளம், கீழவலசை, புதுக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து, 100 ஏக்கருக்கும் மேல் பயிரிடப்பட்டுள்ள மிளகாய் நாற்றுகள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் கவலை அடைந்துள்ளவிவசாயிகள், உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT