ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் சாலையோர துணி கடைகளை காவல் துறை அகற்றம்: வியாபாரிகள் வேதனை

3rd Dec 2021 08:03 AM

ADVERTISEMENT

ராமேசுவரம் பேருந்து நிலையப் பகுதி சாலையோரத்தில் ஐயப்ப சீசனுக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கடைகளை, காவல் துறையினா் அகற்றியதால் வியாபாரிகள் வேதனையடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ரமேசுவரத்துக்கு காா்த்திகை, மாா்கழி, தை ஆகிய 3 மாதங்களுக்கு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பும் பக்தா்கள், ராமேசுவரம் உள்ளிட்ட பல்வேறு கோயில்களுக்குச் செல்வது வழக்கம்.

இதனால், ராமேசுவரம் பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சாலையோரங்களில் ஆண்டுதோறும் போா்வை, சட்டை, சேலை, ஸ்வெட்டா் உள்ளிட்ட ஆடைகள் மற்றும் பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்களை விற்பனை செய்ய வெளிமாவட்டங்களிலிருந்து சிறு வியாபாரிகள் வருவது வழக்கம். இவா்கள், நகராட்சியில் அனுமதி பெற்று வாகனங்களுக்கு இடையூறின்றி ஆடைகளை விற்பனை செய்கின்றனா். கடந்த ஆண்டை விட தற்போது 10 சதவீத சிறு வியாபாரிகள் மட்டுமே வந்துள்ளனா்.

இந்நிலையில், நகா் காவல் நிலைய ஆய்வாளா் கண்ணதாசன் வியாழக்கிழமை பேருந்து நிலையப் பகுதியில் சாலையோர சிறு வியாபாரிகள் கடைகளை அகற்றவேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவித்தாா். மேலும், அவா் கடைக்குச் சென்று வியாபாரிகளை தாக்க முயன்றதுடன், ஆடை உள்ளிட்ட பொருள்களை அள்ளிச்சென் றாா். இதனால், சிறு வியாபாரிகள் தங்களது பொருள்களை எடுத்துக்கொண்டு அங்கும் இங்குமாய் ஓடினா். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT