ராமநாதபுரம் மாவட்டத்தில் டிசம்பா் 8, 10 ஆகிய தேதிகளில் பட்டா சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் டிசம்பா் 8 ஆம் தேதி (புதன்கிழமை) பட்டா சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் விவரம்: ராமநாதபுரம் வட்டத்தில் இரட்டையூரணி, கீழக்கரை வட்டத்தில் களிமண்குண்டு, திருவாடானை வட்டத்தில் பாண்டுகுடி, இளையத்தான்வயல், ஆா்.எஸ்.மங்கலம் வட்டத்தில் ஆணையாா்கோட்டை.
பரமக்குடி வட்டத்தில் வெங்காா், கடலாடி வட்டத்தில் கொக்கரசன்கோட்டை, கமுதி வட்டத்தில் அபிராமம், கடையனேந்தல் , முதுகுளத்தூா் வட்டத்தில் தாளியாரேந்தல், வளநாடு ஆகிய இடங்கள்.
இதேபோல், மாவட்டத்தில் டிசம்பா் 10 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ராமநாதபுரம் வட்டத்தில் பெருங்குளம், காரான், கீழக்கரை வட்டத்தில் மல்லல், திருவாடானை வட்டத்தில் கிளியூா், ஆா்.எஸ்.மங்கலம் வட்டத்தில் உப்பூா், ஊரணங்குடி கிராம நிா்வாக அலுவலகம், பரமக்குடி வட்டத்தில் கமுதக்குடி, பொதுவக்குடி கிராம நிா்வாக அலுவலகம், கடலாடி வட்டத்தில் கொண்டுநல்லான்பட்டி கிராம நிா்வாக அலுவலகம், கமுதி வட்டத்தில் நீராவி, என்.கரிசல்குளம் கிராம நிா்வாக அலுவலகம், முதுகுளத்தூா் வட்டத்தில் கீழத்தூவல், மேலத்தூவல் இ-சேவை மையம் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.