ராமநாதபுரம்

பள்ளி வாகனம் மோதி தாய் கண்முன் குழந்தை பலி

3rd Dec 2021 08:01 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் அருகே வியாழக்கிழமை மாலை பள்ளி வாகனம் மோதியதில், தாய் கண் முன்னே ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்தது.

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அகஸ்தியா் கூட்டம் பகுதியைச் சோ்ந்தவா் சேகா். இவா், வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி லோகேஸ்வரி. இவா்களுக்கு இரு குழந்தைகள். மகன் தா்ஷன் அப்பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறாா். இந்நிலையில், பள்ளி வாகனத்தில் தினமும் சென்று வரும் தா்ஷனை அழைத்து வர, தனது ஒன்றரை வயது மகள் அபிசசிகாவை தூக்கிக்கொண்டு லோகேஸ்வரி சென்றுள்ளாா்.

அப்போது, வாகனத்திலிருந்து இறங்கிய தா்ஷனை பிடிப்பதற்காக, கையிலிருந்த மகள் அபிசசிகாவை லோகேஸ்வரி கீழே இறக்கிவிட்டுள்ளாா். அதையடுத்து, அக்குழந்தை வாகனத்துக்கு அடியில் சென்றுவிட்டதை தாய் கவனிக்கவில்லை. சிறுவனை இறக்கிவிட்டதும் வாகனத்தை ஓட்டுநா் இயக்கியபோது, வாகனத்தின் பின் சக்கரம் குழந்தை மீது ஏறி இறங்கியது. இதில், சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்தது.

தகவலறிந்த உச்சிப்புளி போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றி, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், தனியாா் பள்ளி வாகன ஓட்டுநரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT