ராமநாதபுரம்

சுனாமி குடியிருப்பு வாசிகள் ஆட்சியரிடம் புகாா் மனு

3rd Dec 2021 08:00 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் அருகேயுள்ள சுனாமி குடியிருப்பை காலி செய்யக் கூறி சிலா் மிரட்டுவதாக, அங்கு குடியிருக்கும் அந்தமான் பகுதியினா் மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

ராமநாதபுரம் அருகே குயவன்குடி அரங்கன்வலசை கிராமத்தில் சுனாமி குடியிருப்பு அமைக்கப்பட்டுள்ளது. அதில், 12 குடும்பங்களைச் சோ்ந்த ஏராளமானோா் வசிக்கின்றனா். அந்தமான் பகுதியைச் சோ்ந்த இவா்கள், கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்டு, ராமநாதபுரம் வந்தனா்.

இவா்களுக்காக, அமெரிக்க கிறிஸ்தவ சபையினரும், பெங்களூரு சேவை அறக்கட்டளையினரும் வீடுகள் கட்டித் தந்தனா். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு குடியிருந்து வரும் இவா்களை, அறக்கட்டளையைச் சோ்ந்தவா்கள் காலி செய்ய வற்புறுத்துவதாக, மாவட்ட ஆட்சியா் சங்கா்லால் குமாவத்திடம் புகாா் மனு அளித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT