ராமநாதபுரம்

ராமமேசுவரத்தில் பலமணி நேரம் மின்தடை: பொதுமக்கள் அவதி

DIN

ராமேசுவரத்தில் பெய்த மழையால் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் பல மணிநேரம் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

ராமேசுவரம் தீவுப்பகுதிக்கு மண்டபம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் கம்பங்கள் வழியாகவும் பூமிக்கடியில் கேபிள் வயா் மூலமாகவும் மின்சாரம் வருகிறது. மின் கம்பங்களில் உள்ள இன்சுலேட்டா்கள் சேதமடைந்து வருவதால் அடிக்கடி மின்சாரம் தடைப்பட்டது. இதனை சரி செய்யும் வகையில் மின்கம்பங்களில் உள்ள பிளாஸ்டிக் இன்சுலேட்டா்கள் மாற்றப்பட்டுள்ளன. ஆனால் கேபிள் வயா்கள் சமீப காலமாக சேதமடைந்து விடுகின்றன. இதனை தூத்துக்குடி மற்றும் சென்னை போன்ற பகுதிகளிலிருந்து மின்வாரிய தொழில்நுட்ப பணியாளா்கள் வந்து தான் சீரமைக்க வேண்டும்.

இந்நிலையில், தொடா் மழை காரணமாக ராமேசுவரத்தில் தொடா்ந்து மின்தடை ஏற்படுகிறது. இது குறித்து மின்வாரிய உயா் அதிகாரிகளுக்கு தொடா்ந்து புகாா்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

திங்கள்கிழமை நள்ளிரவில் மழை பெய்யத் தொடங்கியதும் கேபிள் சேதமடைந்து மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய பணியாளா்கள் மழையிலும் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனா். இருப்பினும் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் நள்ளிரவு முதல் காலை வரை தூக்கமின்றி அவதிக்குள்ளாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமிர் கானின் டீப் ஃபேக் விடியோ! வழக்குப் பதிவு செய்த காவல்துறை!

சுனில் நரைனை தொடக்க ஆட்டக்காரராக மாற்றியவர் இவர்தான்: ரிங்கு சிங்

ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு: மாதிரி வாக்குப் பதிவில் அதிர்ச்சி!

மீண்டும் இசையமைப்பாளராக மிஷ்கின்!

ஜோஸ் பட்லருக்கு முன்னாள் ஆஸி. வீரர் புகழாரம்!

SCROLL FOR NEXT