ராமநாதபுரம்

கமுதியில் சமூக நாய்கள் கூட்டம்: பொதுமக்கள் அச்சம்

14th Aug 2021 10:54 PM

ADVERTISEMENT

கமுதியில் சமூக நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிவதால் பொதுமக்கள், வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சிக்குள்பட்ட செட்டியாா் பஜாா், முஸ்லிம் பஜாா், பேருந்து நிலையம் பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட சமூக நாய்கள் சுற்றி வருகின்றன. இதனால் கடைவீதிகளுக்கு பொருள்கள் வாங்க வரும் பெண்கள், குழந்தைகளை அச்சுறுத்தி வருகின்றன. இதனால் பொதுமக்கள் நடமாட அச்சமடைந்துள்ளனா்.

இதுகுறித்து கமுதி பேரூராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகாா் தெரிவித்துள்ளனா். மேலும் பரமக்குடி, பாா்த்திபனூா், முதுகுளத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் சமூக நாய்களை கமுதி எல்லைக்குள் விட்டுச் செல்வதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.

எனவே கமுதியில் சுற்றித் திரியும் சமூக நாய்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT