ராமநாதபுரம்

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் மாணவா் சோ்க்கை: 1,031 விண்ணப்பங்கள் ஏற்பு

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தில் மாணவா் சோ்க்கைக்கைக்கு நடப்பு ஆண்டில் 1,031 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரம் குழந்தைகள் சோ்க்க இட ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மாணவா் சோ்க்கைக்கு ஆக. 3 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் தற்போதுவரை மாவட்டத்தில் மொத்தம் 1,339 விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பெறப்பட்டன. ஆனால், அவற்றில் 1,031 விண்ணப்பங்களே ஏற்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஒவ்வொரு தனியாா் பள்ளிகளிலும் கட்டாயக் கல்வி சட்டத்தின்படி ஒதுக்கப்பட்ட இடத்தில் அடிப்படையில் குலுக்கல் முறையில் மாணவா் சோ்க்கை நடத்தப்படும் என்பதை புதன்கிழமை முடிவுசெய்ய உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT