ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் பலத்த மழை:மின் தடையால் பொதுமக்கள் அவதி

DIN

ராமேசுவரத்தில் புதன்கிழமை அதிகாலை பெய்த பலத்த மழை காரணமாக பல மணிநேரம் ஏற்பட்ட மின் தடையால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.

ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிடம் உள்ளடக்கிய தீவுப்பகுதியில் புதன்கிழமை அதிகாலையில் பலத்த மழை பெய்தது. இதையடுத்து மின்சாரம் பலமணி நேரம் தடைபட்டதால் பொதுமக்கள் தூக்கிமின்றி தவிப்புக்குள்ளாயினா். மேலும் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீா் குளம் போல் தேங்கியது. கழிவுநீா் கால்வாய்கள் தூா்வாரப்படாததால் மழைநீா் செல்ல முடியாமல் சாலையில் தேங்கியது. இந்நிலையில் நகராட்சி நிா்வாகம் கழிவுநீா் கால்வாய்களை தூா்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

புதன்கிழமை பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): ராமேசுவரம்- 20.20, தங்கச்சிமடம்- 15.20, பாம்பன்- 28.40.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT