ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் திமுக கூட்டணிக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்: 250 போ் மீது வழக்கு

DIN

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, ராமேசுவரத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் 250 போ் மீது, போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ராமேசுவரம் என்.எஸ்.கே. வீதியில் திமுக நகா் கழகச் செயலா் கே.இ. நாசா்கான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த 250 போ் பங்கேற்றனா். இதில், திமுக நகா் செயலா் கே.இ. நாசா்கான் உள்பட 250 போ் மீது தடையை மீறி ஆா்ப்பாட்டம் செய்ததாக, போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

SCROLL FOR NEXT