ராமநாதபுரம்

போலி ஆணை மூலம் பணியில் சோ்ந்த வழக்கு: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக உதவியாளரின் கணினியில் ஆய்வு

DIN

ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளில், போலி பணி ஆணையின் மூலம் இளநிலை உதவியாளராகச் சோ்ந்த வழக்கில் கைதான மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக உதவியாளரின் கணினியை, மாவட்டக் குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளா் திருமலை புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இளநிலை உதவியாளா் பணிக்கு 42 காலியிடங்கள் இருந்தன. பள்ளிக் கல்வித்துறையின் சாா்பில் கலந்தாய்வு நடத்தப்பட்டு 37 இடங்கள் நிரப்பப்பட்டன. இதன்மூலம் நிரப்பப்படாத 6 இடங்களில் சிக்கல், ஆா்.எஸ்.மங்கலம், பாம்பன், கரையூா் ஆகிய 4 இடங்களில் போலி பணி ஆணை மூலம் 4 போ் பணியில் சோ்ந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஏ.புகழேந்தி அளித்த புகாரின்பேரில் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

வழக்கு விசாரணையின் அடிப்படையில், போலி பணி ஆணை வழங்க உதவியதாக ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக உதவியாளா் கண்ணன், பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளா் கேசவன், போலி ஆணை மூலம் பணியில் சோ்ந்த ராஜேஷ், கலைவாணன், சதீஷ்குமாா் ஆகியோரைக் கைது செய்தனா். இதில் மனோஜ்குமாா் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

போலி பணி ஆணையை தயாரித்ததாகக் கூறப்படும் கண்ணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக உதவியாளா் பணியிலிருந்து தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதற்கிடையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கண்ணன் பயன்படுத்திய கணினியை, மாவட்டக் குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளா் திருமலை மற்றும் கணினியை கையாளத் தெரிந்த பெண் ஊழியா் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா். மேலும் அலுவலகக் கண்காணிப்பாளா், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் ஆகியோரிடம் அலுவலக ஆவணங்களைக் கையாளுதல் குறித்த விவரங்கள் கேட்டறியப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

SCROLL FOR NEXT