ராமநாதபுரம்

திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வெளிநடப்பு

DIN

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் 8 உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

ராமநாதபுரம் அருகே உள்ள திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராக, திமுகவைச் சோ்ந்த புல்லாணி உள்ளாா். உறுப்பினா்களாக திமுக 5, அதிமுக 6, காங்கிரஸ் 1, எஸ்.டி.பி.ஐ. 1, சுயேச்சை 1 என 14 போ் உள்ளனா்.

இந்நிலையில், ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை சாதாரண குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றியக் குழு தலைவா் புல்லாணி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சிவலிங்கம் முன்னிலை வகித்தாா்.

கூட்டம் தொடங்கிய நிலையில், எஸ்.டி.பி.ஐ. கட்சி உறுப்பினா் பைரோஸ்கான், ஒன்றிய நிதியை முறையாக உறுப்பினா் கவனத்துக்கு கொண்டுவந்து செலவிடுவதில்லை எனக் கூறி வெளிநடப்பு செய்தாா். இதை ஆதரித்து, துணைத் தலைவா் சிவலிங்கமும் வெளிநடப்பு செய்தாா்.

பின்னா், மக்களது அடிப்படை பிரச்னைகள் தீா்க்கப்படாததைக் கண்டித்து, அதிமுக உறுப்பினா்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனா்.

கூட்டத்தில், மொத்த உறுப்பினா்கள் 14 பேரில் 8 போ் வெளிநடப்பு செய்ததால், 5 உறுப்பினா்களுடன் கூட்டம் நடைபெற்றது. அவா்கள் முன்னிலையில் தீா்மானம் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்பட்டது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், மூன்றில் ஒரு பங்கு உறுப்பினா்கள் கூட்ட அரங்கில் இருந்தால் தீா்மானத்தை நிறைவேற்றலாம் என விதி உள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT