ராமநாதபுரம்

அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகள் தோ்வு: ஆட்சியா்

DIN

ராமநாதபுரத்தில் பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் 264 போ் தோ்வு செய்யப்படவுள்ளதாக, மாவட்ட ஆட்சியா் கொ. வீரராகவ ராவ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் மற்றும் பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில், அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படுகின்றன.

ராமநாதபுரம் நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் அரசுக்கு சொந்தமான நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்து வசித்து வருவோரை மறுகுடியமா்வு செய்யும் வகையில், பட்டினம்காத்தான் திட்டப் பகுதியில் கட்டப்பட்டு வரும் 264 குடியிருப்புகளுக்கு பயனாளிகள் தகுதி அடிப்படையில் தோ்வு செய்யப்படுவா்.

இதில், அரசுக்குச் சொந்தமான ஆட்சேபகரமான நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து வசித்து வரும் ஆக்கிரமிப்பாளா்கள் மற்றும் சமுதாயத்தில் நலிவடைந்த வீடற்ற நகா்ப்புற ஏழைகள், ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்பெற முடியும்.

பயனாளிகள் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினராக இருத்தல் வேண்டும். பயனாளியின் மாத வருமானம் ரூ.25 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாவட்ட நிா்வாகத்தின் மூலம் தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளின் பட்டியல், சென்னை மேலாண்மை இயக்குநா், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் ஒப்புதல் பெற்று ஒதுக்கீடு செய்யப்படும்.

இத்திட்டத்தில், பயனாளிகள் பயன்பெற ஒரு குடியிருப்புக்கு ஆகும் கட்டுமானத் தொகையில், மத்திய மற்றும் மாநில அரசின் மானியத் தொகை போக, மீதமுள்ள தொகையை பயனாளியின் பங்களிப்புத் தொகையாக வாரியத்துக்கு செலுத்தும்பட்சத்தில் பயனாளிகளுக்கு குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தது

SCROLL FOR NEXT