ராமநாதபுரம்

பிள்ளையாா்குளம் அரக்காசு அம்மா தா்காவில் மதநல்லிணக்க விழா

DIN

முதுகுளத்தூா் , செப். 25: சாயல்குடி அருகே பிள்ளையாா்குளத்தில் அரக்காசு அம்மா தா்காவில் மதநல்லிணக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சாயல்குடி அருகே பிள்ளையாா்குளத்தில் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரக்காசு அம்மா தா்காவில் இந்து, முஸ்லிம் இணைந்து கந்தூரி விழா கொண்டாடினா். கடந்த செப்.15 ஆம் தேதி தா்கா முன்பாக கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. நாள்தோறும் உலக நன்மைக்கான மவுலீது (புகழ்மாலை) ஓதப்பட்டது. கிராமத்தினா் நோ்த்திகடன்களாக ஆட்டுக்கிடாய்கள், சேவல்கள் பலி பீடத்தில் பலியிடப்பட்டது. அரக்காசு அம்மா தா்காவின் மக்பராவில் புனித சந்தனம் பூசி, பிறைவடிவ பச்சைப்போா்வை போா்த்தப்பட்டு, மல்லிகை சரங்களால் அலங்கரிக்கப்பட்டது. பிள்ளையாா்குளம் விழா கமிட்டியாளா்கள் கூறியதாவது; சாயல்குடியை சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான இந்துக்களும், முஸ்லிம்களும் தா்கா வழிபாட்டில் பங்குகொள்கின்றனா். புரட்டாசி வளா்பிறையில் வரும் வெள்ளிக்கிழமையில் மதநல்லிணக்க விழாவாக வருடந்தோறும் கொண்டாடிவருகிறோம். மழைவளம் சிறந்து விவசாயம் பெருகிடவும், குடிநீா் கஷ்டம் இல்லாமல் இருப்பதற்காக கூட்டுப்பிராா்தனை நடத்துகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

SCROLL FOR NEXT